Posts

Showing posts from August, 2022

பெரிய கதைகள்

பெரிய கதைகள் 👉 சத்ரபதி சிவாஜி 👉 ஹாக்கி வீரர் தியான் சந்த் சிங் 👉 தீரன் சின்னமலை 👉 வாஞ்சிநாதன் 👉 வீரபாண்டிய கட்டபொம்மன்  👉 வ.உ. சிதம்பரம் பிள்ளை 👉 சுப்ரமண்ய சிவா 👉 எஸ். எஸ். விஸ்வநாததாஸ் 👉 டாக்டர்ஜி 👉 தத்தோபந்த் தெங்கடிஜி 👉 மாதவராவ் முளேஜி 👉 சிவராம்ஜி 👉 விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னம் 👉 நாரதர் - உலகின் முதல் செய்தியாளர் 👉 மாப்ளா கலவரங்கள் 👉 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 👉 குரு தேக் பகதூர் 👉 டாக்டர் ஜி சிறை சென்ற நூற்றாண்டு 2021 👉 ஊமைத்துரை 👉 வெள்ளையத்தேவன் 👉 பாரதியார் 👉 பூலித்தேவன் 👉 லாசித் போர்ஃபுகன் 👉 சுவாமி ராமதீர்த்தர் 👉 இஸ்ரேலின் வீர உதயம் 👉 ஹேமு காலானி 👉 ராம ஜென்ம பூமி போராட்ட வரலாறு 👉 ஸ்ரீ அஹில்யாபாய் ஹோல்கர் 👉 தாத்யா தோபே 👉 வித்யாரண்யர் 👉 குரு கோவிந்த சிம்மன் 👉 ராஜ்குரு 👉 வ.வே.சு ஐயர் 👉 தென்னிந்திய புரட்சி 1801 Title of the document 👉 கதைகளை word ஃபார்மட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ள

ஹாக்கி வீரர் தியான் சந்த் சிங்

  தியான் சந்த் சிங் நமது தேசத்தின் சின்னங்கள் பறவை விலங்கு இவையாவும் நாம் அறிவோம். நமது நாட்டின் தேசிய விளையாட்டு தினம் எது என்று நாம் அறிந்து கொள்வோம். ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி ஆகும். அன்று என்ன அவ்வளவு சிறப்பு? அன்றுதான் பத்மபூஷன் விருது பெற்ற உலகப் புகழ்பெற்ற ஹாக்கி வீரர் ,பாரதத்தின் "தியான் சந்த்"  பிறந்த தினம்.  அப்படி சிறப்பு என்ன? ஆங்கிலேயர் காலத்தில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த சோமேஸ்வரர் தத்சிங்  என்ற வீரரின் மகனாக பிறந்த தியான்சிங்,  அவரது குடும்பத்தின் மற்ற சகோதரர் போல் ராணுவத்தில் சேர்ந்தார். ஹாக்கி விளையாட்டு ராணுவத்தில் மிகவும் முக்கியமான பங்கு வகித்தது. தியான் சிங்கும் ஹாக்கி விளையாட வேண்டியிருந்தது .    சிறுவயதில் அவருக்கு மல்யுத்தத்தில் தான் நாட்டம். ஆனால் இப்பொழுது ஹாக்கி விளையாட வேண்டி இருந்தது. ஆகவே தனது பணி நேரம் முடிந்த பின் நீண்ட நேரம் பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். இரவுகளில் நிலா ஒளியில் நீண்ட நேரம் பயிற்சி செய்வார். அப்போது பந்தை நன்றாகப் பார்க்கும் திறன் வரும் என்று அவருக்கு புரிந்தது. இவ்வாறு அவர் செய்வதை பார்த்து அவருடைய பயி...

தீரன் சின்னமலை

வாஞ்சிநாதன்

  வாஞ்சிநாதன் வாஞ்சிநாதன்-ஆயிரக்கணக்கான இளைஞர்களை தனது வீர சாகசத்தால் ஈர்த்த புரட்சி வீரர் (1886 - 1911) வாஞ்சி என்று அறியப்படும் வாஞ்சிநாதன் எனும் புரட்சி வீரன் திருநெல்வேலி மாவட்ட கலெக்டரை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டதன் மூலமாக சுதந்திரப்போராட்ட வரலாற்றில் இடம் பெற்றார். 1886 ஆம் ஆண்டு செங்கோட்டையில் ரகுபதி ஐயருக்கும் ருக்மணி அம்மாளுக்கும் வாஞ்சிநாதன் மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சங்கரன் என்பதாகும். இளமைக்காலத்தில் இவர் மிகவும் அமைதியான, கூச்ச சுபாவம் உள்ள சிறுவனாகவே இருந்துள்ளார். படிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ படிப்பும், பரோடா பல்கலைக் கழகத்தில் பட்ட மேற்படிப்பும் படித்திருந்தார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் இவருடைய பெற்றோர் இவரை பொன்னம்மாள் என்ற பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதன் பிறகு நல்லதொரு அரசாங்க வேலையும் இவருக்குக் கிடைத்தது. திருவிதாங்கூர் காட்டிலாகா துறையில் இவருக்கு எழுத்தராக வேலை கிடைக்க இவர் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். திருவிதாங்கூரில் இவர் தனது ...

வீரபாண்டிய கட்டபொம்மன்

வ.உ. சிதம்பரம் பிள்ளை

 வ.உ. சிதம்பரம் பிள்ளை ஸ்வதேசி கப்பலை ஓட்டிய முதல் இந்தியர் (1872 - 1936) பாரத நாட்டில் முதல் முதலில் உள்நாட்டு கப்பல் சேவையை நடத்திய வ.உ. சிதம்பரனார் கப்பலோட்டிய தமிழன் என்கிற பட்டப் பெயரோடு அழைக்கப்படுகிறார். இவருடைய விடுதலை போராட்ட ஈடுபாட்டினால் ஆங்கிலேயர்களால் சிறையில் இடப்பட்டு மிகக்கடுமையாக நடத்தப்பட்ட போதிலும் இவருடைய மனோதிடம் சிறிதும் குறையவில்லை. இவர் சிறையில் இருந்தபோது பல மணி நேரம் தேங்காய் நார் உரிக்கும் வேலையிலும் கயிறு திரிக்கும் வேலையிலும் ஈடுபடுத்தப்பட்டதால் அவருடைய உள்ளங்கைகளில் தோல் பிய்ந்து ரத்தம் சிந்தியது. ஆனால் இவரை கண்காணித்த சிறை அதிகாரி இவர் மீது இரக்கம் காட்டுவதற்குப் பதிலாக எண்ணெய் பிழியும் செக்கு இயந்திரத்தில் மாட்டிற்கு பதிலாக இவரை சுற்றி வரச் செய்தான். என்ன ஒரு கொடுமை! சட்டம் படித்து புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்த சிதம்பரம் பிள்ளைக்கே ஆங்கிலேய சிறையில் இத்தகையதொரு கொடுமை நிகழ்ந்தது என்றால் மற்றவர் நிலையை நாம் எண்ணிப் பார்க்கவும் முடியாது. இவ்விதமாக செக்கு இயந்திரத்தை சுற்றி வரும்போது அது பாரதமாதாவின் திருக்கோயில் ஆக நினைத்து சுற்றி வந்தேன் என்று சிதம்ப...

சுப்ரமண்ய சிவா

எஸ். எஸ். விஸ்வநாததாஸ்

டாக்டர்ஜி

தத்தோபந்த் தெங்கடிஜி

மாதவராவ் முளே

சிவராம் ஜி

விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னம்

விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னம் பாரதத்தின் தெற்குக் கோடியில் கடல் நடுவே உள்ள பாறையில் எழுந்து நிற்கிறது பிரம்மாண்டமான ஒரு நினைவுச் சின்னம். இது பாரதத்தாயின் தனிப்பெரும் தவப்புதல்வன் சுவாமி விவேகானந்தரின் நினைவாக அமைக்கப்பட்டது. நாமெல்லோரும் இதன் அழகையும் கம்பீரத்தையும் பலதடவை பார்த்திருப்போம். அந்த நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டதன் வரலாறு மற்றும் அதன் பின்னே உள்ள மாபெரும் மனிதரைப் பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம். சுவாமி விவேகானந்தர் குருதேவரின் மகா சமாதிக்கு பிறகு தன்னந்தனியாக பாரத தேவியின் விஸ்வரூபத்தை தரிசிக்க பாரததேசம் முழுவதும் வலம் வந்தார். அப்போதே 1893 செப்டம்பர் மாதம் நடைபெறப் போகும் அமெரிக்கா சிகாகோ நகர் சர்வ சமய மாநாட்டை பற்றி கேள்விப்பட்டு இருந்தார். ஆனால் அவர் எந்த வித முடிவுக்கும் வரவில்லை. 1892 டிசம்பர் 25ஆம் தேதி கன்னியாகுமரி வந்தார். கடல் நடுவே உள்ள பாறைக்கு நீந்தியே சென்று அங்கு மூன்று நாட்கள் தவம் செய்தார். அந்தப் பாறை கன்னியாகுமாரி அம்மன் ஈசனை நோக்கி தவம் செய்த பாறை. சுவாமிஜி அந்தப் பாறையில் தவம் செய்து எதிர்காலப் பயணத்திற்கு ஒரு தெளிவான முடிவுக்கு வந்து, அதன்பட...

நாரதர் - உலகின் முதல் செய்தியாளர்

மாப்ளா கலவரங்கள் - நூற்றாண்டு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

குரு தேக் பகதூர்

டாக்டர் ஜி சிறை சென்ற நூற்றாண்டு

  டாக்டர் ஜி சிறை சென்ற நூற்றாண்டு டாக்டர்ஜியின் துணிவும், தன்னம்பிக்கையும்:- அது ஒரு கோர்ட் அறை. மிகவும் பரபரப்பான சூழ்நிலை. நாள் 1921 ஜூன் 14. நீதிபதியின் ஸ்தானத்தில் நீதிபதி ஸ்மேலி என்கிற வெள்ளைய நீதிபதி அமர்ந்திருக்கிறான்.  விசாரணைக் கூண்டில் டாக்டர் ஜி நின்றிருக்கிறார். ஆம், நமது பரம பூஜனிய ஆத்ய சர்சங்கசாலக் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் தான் அவர். ஆனால் அப்போது அவர் சங்கத்தை இன்னும் தொடங்கவில்லை. காங்கிரஸ் இயக்கத்தின் அறைகூவலை ஏற்று ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆட்கள் சேர்க்கும் பொதுக்கூட்டங்களில் அனல் பறக்கப் பேசி வந்தார் டாக்டர் ஜி.   1920 அக்டோபர் மாதம் காடோல் தாலுக்கா பொதுக்கூட்டத்திலும், காடோல் பர்கானா பொதுக்கூட்டத்திலும் தலைமைப் பொறுப்பை ஏற்று டாக்டர் ஜி நிகழ்த்திய உரைகளின் ஆதாரத்தில் அன்றைய வெள்ளை அரசு வழக்கு தொடுத்து இருந்தது. டாக்டர் ஜிக்காக வழக்கறிஞர் போபடே வழக்கு விசாரணை செய்து கொண்டிருந்தார். அன்று இன்ஸ்பெக்டர் ஆபாஜி சாட்சியம் அளிக்க வந்தார். அவரை போபடே குறுக்கு விசாரணை செய்தார். ஆனால் வழக்கறிஞரை  குறுக்கு விசாரணை செய்ய முடியாத வண்ணம் நீதிபதி ஸ்...

ஊமைத்துரை

வெள்ளையத்தேவன்

 வெள்ளையத்தேவன்     திருநெல்வேலிச் சீமை தந்த தீரம் மிக்க வீரன் வெள்ளையத்தேவன்.  நெஞ்சுரமும், போர்த்திறனும், நல்ல உடல்கட்டும், பேரழகும் கொண்ட வெள்ளையத் தேவனை வீரபாண்டிய கட்டபொம்மன் தன் தளபதியாக மட்டுமல்லாமல் மகனாகவும் நினைத்துப் போற்றினார்.      வீரபாண்டிய கட்டபொம்மு மகாராஜாவிற்குப் பிள்ளைகள் இல்லாததால் வெள்ளையத்தேவனை தத்து எடுத்து வளர்த்து வந்தார்.  வெள்ளையத் தேவன் நிகரற்ற வீரன். ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவதில் மகாசூரன்.      போர்க்களம் என்றால் அவருக்குக் கொள்ளைப் பிரியம்.  வீரபாண்டிய கட்டபொம்மு மகாராஜாவின் வலது கரம்.  வெள்ளையர்கள் வீரபாண்டியரிடம் கப்பம் கேட்டு வந்தபோது முதலில் சீறிப்பாய்ந்தது வெள்ளையத்தேவன்தான்.      அடங்காத காளை ஒன்றை வெள்ளையம்மாள் என்ற பெண் வைத்திருந்தாள்.  காளையை அடக்குபவர்களுக்குத்தான் நான் மாலையிடுவேன் என்று வீரசபதம் செய்திருந்தாள். ஆனால் காளையை யாரும் அடக்க முடியவில்லை.  இதை அறிந்த வெள்ளையத்தேவன் அக்காளையை அடக்கி வெள்ளையம்மாளை மணந்து கொண்டார்.      இவர்களுக்க...

பாரதியார்

பூலித்தேவன்