ஹேமு காலானி
ஹேமு காலானி சுதந்திரத்தின் வீர புதல்வன் 👇 ஆடியோ please wait.... இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் உள்ள ஸக்கர் நகரில், 1923ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி பிறந்தார் ஹேமு காலானி. மாபெரும் சுதந்திர போராட்ட புரட்சியாளரான இவர் தனது 19ம் வயதிலேயே பாரதத்தாயின் பாதங்களில் மலராய் அர்ப்பணமானார். இவரது தந்தை பெஸ்சுமல் காலானி அரசு அலுவலகத்தில் எழுத்தராகவும், தாயார் ஜேதி பாய் இல்லத்தரசியாகவும் இருந்தனர். பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களாக இருந்தபோதும், பிற மக்களுக்கு உதவிகள் செய்து எளிய வாழ்வு வாழ்ந்தனர். ஹேமு மூன்று உடன்பிறப்புகளில் மூத்தவர். பெற்றோரிடம் மிகுந்த அன்பும் செல்லமும் கொண்டிருந்தார். ஹேமு உள்ளூர் அரசுப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். இவர் நற்குணங்களும் அமைதியான தோற்றமும், எல்லோரையும் கவர்ந்து இழுக்கக்கூடிய தன்மையும், இனிமையான பேச்சழகும், தன்னடக்கமும் உடையவராக இருந்தார். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் சேர்ந்து விளையாடுதல், அவர்களுக்கு உதவி செய்தல் இவற்றுடன் ஒரு பிரகாசமான மற்றும் அறிவுள்ள மாணவராக படிப்பிலும் சிறந்து விளங்கினார். வீடு, பள்ளி மற்றும் சமூகம் என அனை...