Posts

Showing posts from December, 2022

லாசித் போர்ஃபுகன்

லாச்சித் போர்ஃபுகன் (அஸ்ஸாம் சிவாஜி) உலகில் செல்வம் மிக்க நாடாக பாரதம் திகழ்ந்திருந்த காலம். கிரேக்கர்களும், ஹுணர்களும், சகரர்களும் என்று பற்பல குழுவினரும் பாரதத்தை தத்தம் உடைமையாகவும், அதன் செல்வ வளமையை கொள்ளையடிக்கவும் பாரதத்தின் மேல் படையெடுத்தனர். ஆனால் அவர்கள் அத்தனை பேரும் விரட்டியடிக்கப்பட்டனர்; அல்லது ஜீரணிக்கப்பட்டு பாரதமயமாயினர். இவர்களை அடுத்து இங்கு படையெடுத்தவர்கள் முஸ்லிம்கள். பாரதத்தில் முகலாயர்கள் பாபர் காலம் முதல் ஔரங்கசீப் காலம் வரை நாட்டின் பெரும் பகுதியை வென்று மாபெரும் முகலாய சாம்ராஜ்யத்தை வடபகுதியில் நிறுவினார்கள். தென்புறத்திலும் பாமினி ஸுல்தான்கள் அரசுகளை அமைத்தனர். இப்படியாக தமது நாட்டை முழுவதுமாக அடிமைப்படுத்திவிட்டனர். அந்நிலையிலும் கூட தனது பகுதியை சுதந்திர ஹிந்து அரசாகவே தற்காத்து வந்தது காமரூபம் எனும் அஸ்ஸாம் பகுதியாகும். முகலாயர்கள் அஸ்ஸாமையும் விட்டுவிட விரும்பவில்லை. ஜஹாங்கீர் தன் ஆட்சிக் காலத்தில் அஸ்ஸாமின் மீது பலமுறை படையெடுத்தார். அதன்பின் ஷாஜஹானும் தன் ஆட்சியில் முயற்சித்தார். ஆனால் இவர்கள் அடி, உதை வாங்கி ஓடிப் போனதுதான் மிச்சம். ஔரங்கசீப் பாதுஷாவ...